வெள்ளி, 17 மே, 2013

Posted by Chief Editor On 9:43 AM


அம்மாவென்று
அழகாய்
அழைப்பேன் - என்
ஆனந்தமே

உம்மாவென்று
உயர்வாய்
உரைப்பேன் - என்
உயிர் ஓவியமே

மம்மாவென்று
மகிழ்வாய்ச் சொல்வேன் - என்
மரகதமே

மம்மி என்று
மாற்றியும் சொல்வேன் - என்
மாணிக்கமே

சேய்ப்பாட்டு
நான் பாட

செவி சாய்த்து
நீ கேட்க

கடன் கேட்பேன்
கருவறை நானும்

அதில் வரம்
கேட்பேன்
என்
கருவினில்
நீயும் !

-------------------
பிரகாசக்கவி
எம்.பீ அன்வர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக