சாலை ஓரத்தில் வண்ண மீன்கள் விற்கும் கடையை பார்த்த படி நின்றால் என் மகள். என்னமா பாக்குற ? எனக் கேட்டேன்..
இந்த அழகான மீன்கள ஏன்மா தொட்டில அடச்சு வச்சுருக்காங்க ? என்று கேட்டாள். அது அழகுக்காக வீட்டில் வளர்கக் கூடிய மீன் அத இப்படிதான் கண்ணாடி தொட்டில அடச்சு வைப்பாங்க என்றேன்.
ஏமா நா அழகா இருக்கேனா? நீ ரொம்ப அழகு டா ஏன் கேக்குற? என்று கேட்டேன்.
அப்போ என்னையும் இப்படி கண்ணாடி கூட்டில அடச்சு வைப்பாங்களா? அழகுக்காக? என்றால்.
மனிதர்களை அப்படி வைக்க மாட்டாங்க டா என்று கூறினேன்.
மற்ற மிருகங்கள் நம்மை அடிமை படுத்துவதில்லை, நம்மை அடக்கி ஆழ்வதும் இல்லை. ஆனால் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று கேட்டால்.
பதில் இன்றி வாயடைத்துப் போனேன்.
குழந்தைகள் எப்பொழுதுமே நம்மை விட உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள்.
- நந்த மீனாள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக