நாள் முழுவதும் குடும்பத்தை நினைத்தே காலத்தை ஓட்டினாள்.
அனைவரின் மனதையும் அறிந்திருப்பாள், அவளின் மனம் யாருக்கும் புரியாத புதிராய் நிற்கும்.
முகத்தில் சிரிப்பை சுமந்திருந்தாலும் மனதில் சுமைகளை சுமந்திருப்பாள்.
சிறகு இருந்தும் பறக்கத்தேரியாத கூண்டுக்கிளி ஆகிவிட்டாள் பெண்.
உன் சிறகு அழுகுக்காகத்தானே ஒழிய அதை நீ அனுபவிக்கக் கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டாள்.
அவள் சிந்திய கண்ணீரை நான் கையில் தாங்கியதில்லை, அவளின் தலையணை மட்டுமே தங்கியது அவளின் கண்ணீர் துளிகளை.
உண்மையில் பெண் அழப்பிறந்தவள் அல்ல ஆழப் பிறந்தவள் பெண்.
என்று ஆழப்போகிறாள் என்பது அவள் எடுக்கும் முயற்சிகளை பொறுத்துள்ளது.
அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் நம்பிக்கையோடு.
- நந்த மீனாள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக