தொழில் வேலையாக சென்றிருந்த கணவன் மனைவிக்கு ஒரு குறுந்தகவல் (SMS) அனுப்பினான்:
"ஹாய், நான் இன்று வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும், ஏன்ட அழுக்கு டவுசரையும், ஷர்டையும் கழுவிடு...
#பதிலைக் காணோம்#"
மீண்டும் கணவன் ஒரு SMS அனுப்பினான்,
"இன்னக்கி இரவு சாப்பாடு எனக்கு மிக விருப்பமான மீன் குழம்பு கறி வைக்க மறந்துடாதே"
#பதிலைக் காணோம்#"
மீண்டும் ஒரு SMS அனுப்பினான்,
"ஆஹ், நான் உனக்கு சொல்ல மறந்துட்டேன், எனக்கு இந்த மாசத்துல இருந்து சம்பளம் (Salary) கூட்டி Promotion குடுத்திருக்காங்க, உனக்கு என்னமோ ஒரு தங்க மாலை வேணும் எண்டு சொன்னீயே, அது என்ன?"
உடனே மனைவியிடமிருந்து பதில் வந்தது:
"ஒஹ்! உண்மையாவா? நான் சொன்னது அந்த சிவப்பு மாணிக்க கல்லு வெச்ச தங்க மாலை, தேங்க்ஸ் யூ Darling...!"
கணவனிடமிருந்து பதில்:
"சாரி, எனக்கு சம்பளம் கூட்டியதுன்னு பொய் சொல்லிட்டேன், முதல் SMS கிடைச்சதான்னு Confirm பண்ணத் தான் அனுப்பினேன். சாரி ஹனி... குட் நைட்...!"
0 கருத்துகள்:
கருத்துரையிடுக