நண்பர்கள் சிலர் அசைவ உணவு விடுதிக்குச் சென்று மட்டன் பிரியாணி சாப்பிட்டுப் பார்த்தனர்
அந்தப் பிரியாணியிலிருந்த ஆட்டுக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
அதில் ஒருவன் உடனே சர்வரை அழைத்து, “இது ஆட்டுக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் மாட்டுக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான்.
சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் ஆட்டுக்கறியுடன் கொஞ்சம் மாட்டுக்கறியும் சேர்ப்போம்” என்றான்.
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன்.
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு ஆட்டுக்கு ஒரு மாடுதான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
அவ்வளவுதான் சாப்பிட்ட அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக