புதன், 30 அக்டோபர், 2013

Posted by Chief Editor On 8:13 AM

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
Posted by Chief Editor On 8:11 AM

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். 

சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.
Posted by Chief Editor On 8:09 AM

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.

அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு.

புதன், 21 ஆகஸ்ட், 2013

Posted by Chief Editor On 9:53 PM

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.

பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான்,நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.

அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.

நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.

அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.

ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.

மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.

அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம் ’என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக் கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன்,நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.

மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.

நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அதை எம்மை விட்டு பிரிப்பது ரொம்ப கடினம்.


திங்கள், 22 ஜூலை, 2013

Posted by Chief Editor On 5:40 PM

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடைகரையில் சந்தித்து கொண்டன 

நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன.

சிறிது நேரம் கழித்து குளித்தது போதும்னு அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது

பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகின் உடைகளில் மயங்கி அவலச்சணத்தை கொண்டாடிகொண்டிருகிரார்கள்.
Posted by Chief Editor On 5:31 PM

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன். “”என்னடா?” கோபத்துடன் கேட்டார். “இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்”

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்.

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்.
Posted by Chief Editor On 5:27 PM

ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு 9 ஆண்களும், 1 பெண்ணும் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதில் யாராவது ஒருவர் கையிறை விட்டால் மட்டுமே ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க முடியும். இல்லை என்றால் கயிறு அறுந்துவிடும்.

இந்த நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து யாராவது ஒருவர் தனது உயிரை தியாகம் செய்யுமாறு கோரிக்கை குரல் வருகிறது.

ஆனால், ஆண்களில் யாருமே உயிரை தியாகம் செய்ய முன்வரவில்லை.

அந்த சமயத்தில், அவர்களைக் காப்பாற்ற அந்த பெண் தானே முன் வந்து கயிறை விடுவதாகக் கூறுகிறாள்.

அவள் கயிறை விடுவதற்கு முன்பு, என் குடும்பத்துக்காக நிறைய தியாகம் செய்துள்ளேன். அதுபோல் இன்று உங்களுக்காக இந்த தியாகத்தைச் செய்கிறேன் என்று கூறினாள். இதைக் கேட்ட அனைத்து ஆண்களும், தங்களை மறந்து கைதட்டினர்.

பிறகென்ன... அந்த பெண் மட்டும் மீட்கப்பட்டு தனது இடத்தை அடைந்தாள்.
Posted by Chief Editor On 5:19 PM

'இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’
ஆசையோடு கேட்டான் அமுதன்.

“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா
தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா…
கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா,
என் மனைவி.

அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க…. உங்க
அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான்.
அண்ணன்தான் அழைத்தார்.

“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன்.
“என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன்
கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு
செய்திருப்பாள்.

“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி
நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட
ஆயத்தமானேன்.

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா
சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…
தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை…
உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த
மாசம் நீ எங்கே போவே?’
என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்.

நன்றி: குமுதம்

வெள்ளி, 19 ஜூலை, 2013

Posted by Chief Editor On 2:12 AM

பன்றி, பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.

நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .

பசு கூறியது , 
"நீ கூறுவது உண்மையே. அதன் காரணம், நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''

ஞாயிறு, 14 ஜூலை, 2013

Posted by Chief Editor On 9:34 AM

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

திங்கள், 8 ஜூலை, 2013

Posted by Chief Editor On 10:31 AM

ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது.

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.

அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்.
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.

- வை . நடராஜன்
Posted by Chief Editor On 10:17 AM
தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே"
Posted by Chief Editor On 10:06 AM
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...?
Posted by Chief Editor On 10:00 AM
ஒரு பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பக்தா,உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!’ 

பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ‘நிறைய செல்வம் வேண்டும்!’ என்றார். 

அப்படியே ஆகட்டும்!’ என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணோம்! ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்! 

அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார். ’ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?’ ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிடும்!’ என்றும் அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்கமுடியாமல் திணறினார்.

அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?’ என்று கேட்டார். 

அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல!’ என்றார் பக்தர். ‘அதைப் போலிஸ்ல கொடுத்துட்டேனே!’ 

நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண் மூடி நிற்கக்கூட இல்லை!’ என்று சிரித்தார் கடவுள். ‘செல்வம் கிடைப்பதற்கு முன்னால் மாதக்கணக்கில் தவம் செய்து என்ன புண்ணியம்? அது கிடைத்தபிறகு ஏற்பட்ட குழப்பத்தை உன்னால் தீர்க்கமுடியவில்லையே!’ 

மன்னிக்கவேண்டும் கடவுளே, இப்போது நான் என்ன செய்வது?’ புலம்பிய பக்தருக்குப் பதில் சொல்லக் கடவுள் அங்கே இல்லை!

தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுவதுதான் ஜென். அப்படியில்லாமல் கடவுளிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாதனமாக அதை உபயோகித்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கமுடியாது!

புதன், 3 ஜூலை, 2013

Posted by Chief Editor On 9:40 AM
என்மேல் எந்த தவறும் இல்லை. ஆனால், ராமன் அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாரோ! நான் தனியாகப் போனால், "இவனால் தானே நாம் காட்டுக்கு வந்தோம்' என தப்பாக எண்ணுவாரோ என்னவோ! எனவே, எல்லா ரிஷிகளும் என்னுடன் வரணும்,'' என்று கேட்டுக் கொண்டான் பரதன். ரிஷிகளும் அவனுடன் சென்றார்கள். இந்த சம்பவத்தை ஒரு கதையுடன் ஒப்பிடுவார்கள்.

ஒரு விவசாயி தன் நிலத்துக்கு போகும் வழியில், பாம்பு படமெடுத்து நின்றது. சாதாரணமாக, மற்றவர்கள் தடியை எடுத்து அடிக்க ஓடியிருப்பார்கள், அல்லது பயந்து பின் வாங்கியிருப்பார்கள். ஆனால், இவரோ கீழே விழுந்து வணங்கினார். 

""நாகராஜா! நீ தான் என் நிலத்துக்கு காவல் தெய்வம். உன்னால் தான் எனக்கு அமோகமான மகசூல் கிடைக்கிறது போலும்! தொடர்ந்து இங்கேயே இரு,'' என்றார். பாம்பு தலையைத் தாழ்த்திக் கொண்டு, அருகில் இருந்து புற்றுக்குள் போய்விட்டது. அடுத்தநாள், விவசாயி பால் செம்புடன் வந்தார். புற்று அருகே வைத்து, ""நாகராஜா, பசியாறிக் கொள்,'' என்றார். பாம்பு வெளியே வந்தது. பாலைக் குடித்தது. போய் விட்டது. விவசாயி, செம்பை எடுத்துப் பார்த்தார். அதற்குள் ஒரு தங்கக் காசு கிடந்தது.

இதேபோல், ஒவ்வொரு நாளும் விவசாயி பாலை வைக்க, பாம்பும் குடித்து விட்டு காசைப் போட, இவர் பணக்காரராகி  விட்டார். ஒருமுறை, அவர் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. மகனை அழைத்து, ""நான் திரும்பி வரும் வரை, பாம்புக்கு பால் வை,'' என்று சொன்னார்.

மகனும் பால் வைக்கச் சென்றான். செம்பை எடுத்துப் பார்த்த போது, தங்கக்காசு இருந்தது. மறுநாள், பால் வைத்தான். அப்போதும் காசு இருந்தது. அப்போது, அவன் மனதில் விபரீத எண்ணம் பிறந்தது.

"இந்தப் பாம்பு புற்று நிறைய காசு வைத்திருக்கிறது. கஞ்சப்பாம்பு, தினமும் ஒன்றே ஒன்றை போடுகிறது. புற்றை உடைத்து விட்டால் எல்லாக் காசையும் ஒரேநாளில் எடுத்துக் கொள்ளலாம். பாம்பைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்று, மறுநாள் அது பால் குடித்துக் கொண்டிருந்த வேளையில், தடியை தூக்கி அடித்தான். இவனுக்கு கெட்ட நேரம் தலையில் விழ வேண்டிய அடிவாலில் விழ, கொதித்தெழுந்த பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. அவன் இறந்து போனான். திரும்பி வந்த விவசாயி, ரொம்பவும் வருத்தப்பட்டார்.

ஆனாலும், பாம்புக்கு துன்பம் செய்ததால் தானே மகன் <உயிரிழந்தான் என்ற <உண்மையைப் புரிந்து கொண்டார். மறுநாளேபால் செம்புடன் புற்றுக்கு சென்றார். ஆனால், பாம்பு அதைக் குடிக்கவில்லை.
""நீர் இத்தனை நாளும் எனக்கு சேவை மனப்பான்மையுடன் பால் வைத்தீர். இனிமேல், நம் மகனைக் கொன்ற பாம்பு தானே என்ற எண்ணத்தையும் சுமந்து கொண்டு தான் பால் வைப்பீர். எனவே, இனி இதைக் குடிக்கமாட்டேன்,'' என சொல்லிவிட்டு போய்விட்டது.

தன் மகனைக் கொன்ற பாம்பு பற்றி விவசாயி தப்பாக நினைக்கவில்லை. ஆனாலும், பாம்பு அவர் மீது சந்தேகப்பட்டது. அதுபோல், ராமனும் பரதனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அண்ணன் தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தே, பரதன் மகரிஷிகளின் துணையோடு சென்றான்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் நமக்கு செய்த துன்பத்துக்காக, ஒட்டுமொத்த குடும்பத்தையே வெறுக்கக்கூடாது. அந்தக் குடும்பத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள். எல்லாரையும் தவறாக நினைக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

செவ்வாய், 25 ஜூன், 2013

Posted by Chief Editor On 8:41 AM

கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் .

"தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக இத்தன பேரு காத்துகேடக்கனுமா?" என்று ஆத்திரமாய் கேட்டார் மேஸ்திரி மாணிக்கம். "சரி விடுங்க அண்ணாச்சி சின்ன பையந்தான போகப்போக சரியாயிடுவான்" என்று மாணிக்கத்தை சமாதான படுத்தினார் ராமன். "என்னாய்யா உன் தோஸ்த் பையன்னு பாசமா? இஞ்சினியர் வண்டியனுப்பி அரைமணி நேரத்துக்கு மேலாகுது நீயா பதில் சொல்லுவ?" என்று ராமனை பார்த்து கேட்டார் மாணிக்கம். "உனக்கு இது தான் கடைசி, இன்னொருதரம் நேரமாச்சி அப்புறம் வேற வேலை தேடவேண்டியதுதான்" மிரட்டியபடியே வண்டியில் ஏறினார். அவரை தொடர்ந்து மற்ற வேலையாட்களும் வண்டியில் ஏற சக்திவேலுவும் ஏறி உட்கார்ந்தான். வண்டி நகர ஆரம்பித்ததும் "மாணிக்க அண்ணே இன்னைக்கு எந்த ஏரியாக்கு இஞ்சினியர் வர சொல்லிருக்காரு" என்று வண்டியிலிருக்கும் ஒரு பெண் கேட்க, "நம்ம பக்கத்தூர் கவர்மெண்ட் பள்ளிகூடத்துக்கு வர சொல்லியிருக்காரு அங்கதான் வேலையாம்" என்றார் மாணிக்கம்.

உடனே சக்திவேலுக்கு மனதில் சந்தோசம் உண்டானது பிரபு, செல்லத்துரை, பாண்டி, சாந்தி டீச்சர் எல்லாரும் மனதுக்குள் வந்துபோனார்கள்."இவ்வளவு சீக்கிரம் மீண்டும் அங்க போவோம்ன்னு நினைக்கவே இல்ல" என்று மனதுக்குள் முனுமுனுத்தான். வண்டி பள்ளிக்குள் நுழையும்போது அவன் மனதில் ஏதேதோ உணர்வுகள், அப்பா இருந்திருந்த நானும் இப்போ கிளாஷ்ல உட்கார்ந்து படிச்சுகிட்டு இருப்பேன் இப்படி கூலி வேலைக்கு அனுப்பிருக்க மாட்டார் என்று அவன் மனம் பழைய நினைவுகளை யோசித்தபடியே இருந்தது.

அனைவரும் வண்டியில் இருந்து இறங்கி பள்ளியை நோட்டம் விட்டபடியே இருந்தனர். பள்ளி முழுவதும் திருவிழா போல அலங்காரம் செய்யப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மண்ணே வணக்கம் பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்து கொண்டிறிந்தது. மாணிக்கம் இஞ்சினியரிடம் போனான் "என்னா சார் கவர்மெண்ட் ஸ்கூல்ல பாட்டெல்லாம் பாடிகிட்ருக்கு ஆண்டுவிழாவா?" என்று கேட்டான். "இல்ல மாணிக்கம் இன்னைக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாம் அது நிகழ்ச்சி நடத்துறாங்க நம்ம ஊரு எம்.எல்.ஏ கூட வராராம் அதுக்காக மேடை ஏற்பாட்டுக்கு தான் நம்மகிட்ட சொல்லிருக்காங்க" என்று சொல்ல "பண்ணிடலாம் சார் நம்ம ஆளுங்கள விட்ட மதியதுக்குள்ள ஏற்பாடு பண்ணிடுவாங்க" என்றார். "மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்குது ஒரு மணிக்குள்ள நீங்க முடிச்சுகொடுக்கணும்" என்று சொன்னார் இஞ்சினியர்.

சக்திவேல் வண்டியிலிருந்து இறங்குவதைபார்த்த இஞ்சினியர் "மாணிக்கம் பையன் யாரு புதுசா இருக்கான்?" என்று கேட்டார், "என்கிட்டே வேலை செஞ்ச முத்துவோட பையன் சார். பாவம் பத்துநாளைக்கு முன்னாடிதான் அவன் அப்பன் பஸ்ல வரும்போது ஏதோ ஒரு கட்சி தலைவர கைது பண்ணிட்டாங்கன்னு பஸ் மேல கல்ல விட்டு எறிஞ்சாங்க, அவங்க கட்சிகாரங்க அந்த கல் அவன் தலைமேல பட்டு அந்த இடத்துலேயே உசுரு போய்டுச்சு. இப்ப படிக்கிற வயசுல இந்தப்புள்ள வேலைக்குவருது" என்றபடியே பெருமூச்சு விட்டார் .

" சரி விடுங்க எல்லாம் விதி. நீங்க இருந்து விழா முடிஞ்சதும் மேடைய கலைச்சுடுங்க, வேலை முடிஞ்சதும் அந்த பையன விழாமுடியர வரைக்கும் ஸ்கூல்ல எங்காவது மறைஞ்சிருக்க சொல்லுங்க சின்ன பையன வேலைக்கு வெச்சா பிரச்சனை ஆ யிடும்" என்றார் இஞ்சினியர். "சரிங்க சார் விழா முடியரவரைக்கும் அந்த பக்கம் வராம பாத்துகறேன்" என்று சொன்னார் மாணிக்கம்.

அங்கு விளையாடி கொண்டிருந்த செல்லதுரையும், பாண்டியும் சக்திவேலை பார்த்ததும் அவனிடம் ஓடிவந்தார்கள், "டேய்! சக்திவேலு எப்படிடா இருக்க ஏன்டா ஸ்கூல் வரதே இல்ல? டீச்சர் எல்லாரும் கேட்டுகிட்டே இருந்தாங்கடா" என்று கேட்க, "இனிமே நான் ஸ்கூல் வரமாட்டேண்டா, என் அப்பா செத்துபோச்சு இல்ல இனிமே நான் தாண்டா வேலைக்கு போகணும்" என்று கூறிகொண்டிருக்கும் போதே அங்கு மாணிக்கம் வந்தார் "டேய்! வந்ததும் என்னடா பேச்சு" என்று கேட்க, சக்திவேல் மௌனமாய் மாணிக்கத்தை பார்க்க "அண்ணே! இது அவன் படிச்ச ஸ்கூல்ண்ணே கூட படிச்ச புள்ளைங்க அவன பாத்ததும் ஆசையா பேசுதுங்க" என்று ராமன் சொன்னார். "சரி சரி மதியதுக்குள்ள வந்த வேலை முடியனும்டா அதான்" என்றபடியே நகர்ந்தார்.

மேடையை ரெடி பண்ண ஆட்கள் மும்மரமாய் வேலை செய்துகொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு சக்திவேலும் பலகைகளை எடுத்துகொடுப்பது, ஆணி அடிப்பது போன்ற சிறு வேலைகளை செய்துகொண்டிருந்தான். வேலையின் நடுவே அவனது கண்கள் மேடையில் கட்ட வைத்திருக்கும் திரையையே பார்த்தது திரையில் "குழந்தை தொழிலாளர் ஒழிப்புதினம்" என்று எழுதி அதன்கீழ் "பிள்ளைகளின் வருமானம் பெற்றவருக்கு அவமானம்" என்று இருந்தது.

அவன் அதை படித்தபடியே வேலை செய்துகொண்டிருக்கும் போது மேடை வேலைகளை பார்வையிட அங்கு வந்த தலைமை ஆசிரியர் அவனை பார்த்தார், "நீ சக்திவேலுதான?" என்று கேட்டார்."ஆமா சார்" என்றான் சக்திவேல் "என் பள்ளிகூடத்துக்கு வரதில்ல?" என்று கேட்க, பதில் பேசாம அவன் நிற்க "சார் அவன் அப்பனும் இறந்து போயிட்டான், அவன் அம்மாவுக்கும் வாய் பேசமுடியாது பாவம் அவன் என்னா சார் பண்ணுவான்?" என்று சொன்னார் ராமன். "நான் உதவிபண்ணா படிக்கிறயா?" என்று அவர் கேட்க ராமனுக்கு சந்தோசமானது அவர் சொன்னதை கேட்டதும். 

"வேண்டாம் சார் நான் படிக்கல" என்றான் சக்திவேல்.
"ஏன்டா வேண்டாம்னு சொல்லற?" என்று ஆசிரியர் கேட்க மௌனமாய் நின்றான் சக்திவேல்.
"சொல்லுடா என் போகலைங்கிற?" என்று ராமன் கேட்க,
அழுதபடியே சக்திவேல் சொன்னான் "நீங்க உதவி பண்றதுல நான் படிக்கலாம் ஆனா என் அம்மாக்கு என்னால சாப்பாடு போடமுடியாது. நான் வேலைக்கு போனாதான் என் அம்மாவ பாத்துக்கமுடியும். இந்த போர்டுல எழுதியிருக்கிறத போல என் வருமானம் என் அம்மாக்கு அவமானம் இல்ல சார்" என்று சொல்ல தலைமை ஆசிரியர் எதுவும் பேசாமல் அந்த திரையில் எழுதி இருந்த வாசகத்தை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

சிறிது நேரத்தில் வேலைகள் முழுவதும் முடிந்து மேடை அலங்காரமாய் காட்சியளித்தது.

விழா ஆரம்பம் ஆனது சக்திவேல் தனியாக ஒரு வகுப்பறையில் அமரவைக்க பட்டிருந்தான். அவனது ஆட்கள் விழாவை பார்க்க சென்றுவிட்டனர், தனியாக இருப்பதை நினைத்து சக்திவேல் கவலை கொள்ளவில்லை மாறாக அவனுக்கு சந்தோசமாகவே இருந்தது. அது அவன் படித்த வகுப்பறை, மீண்டும் பள்ளியில் நம் வகுப்பிலே உட்காருவோமா? என்று நினைத்து அழுத அவனுக்கு அவர்கள் மறைவாய் இருக்க சொன்னது சந்தோசமாகவே இருந்தது. வகுப்பறையில் அமர்ந்திருப்பது ஒரு சில மணி நேரங்களே என்று தெரிந்தும் அவன் மனம் முழுவதும் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தது. நிஜம் கிடைக்காது என்று தெரிந்ததும் நிழலை நேசிக்க கற்றுகொடுத்திருந்தது அவனது ஏழ்மை. 
Posted by Chief Editor On 8:31 AM
ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். 

பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்.

சனி, 22 ஜூன், 2013

Posted by Chief Editor On 5:43 AM

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

“சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்பன்” என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.

அதற்கு தெனாலிராமன் “ஐயா சேட்டே! குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே………… இது என்ன நியாயம்” என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

வியாழன், 20 ஜூன், 2013

Posted by Chief Editor On 8:46 AM

நான் மறக்க நினைத்தும் மறக்க முடியாத கதை. எனது தூரத்து உறவுக்கரரான பிரகாஷ் என்பவரின் குடும்பத்தில் நடந்த ஒரு சோக சம்பவம். பிரகாஷ் சென்னை அடுத்து ஆவடியில் வசித்து வந்தார், அம்பாத்தூரில் உள்ள ஒரு சைக்கிள் கம்பணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்,அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையொடு தன் மனைவி நளினியின் உறவினர்கள் வீட்டு விருந்தையும் முடித்துகொண்டு,நான்கே நாட்களில் பணிக்கு திரும்பி விட்டார்,அதை பார்த்த அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் கம்பணியில் இருந்தவர்கள் கூட "ஏன்?இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட "என்று கேட்டு இருக்கிறார்கள்.அதற்கு அவர் இந்த லீவ்வே பொதும் என்று கூறிவிட்டார்.

அந்த அளவிற்கு தொழில் மீது அவருக்கு பக்தி.இதை அவர் மனைவியும் புரிந்துக்கொண்டு அவரின் விருப்படியே நடந்துக்கொண்டார்,அவர் குடுத்து வைத்தவர் என்று அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள்.தினமும் வேலைக்கு செல்லும் பொது தன் மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுத்து விட்டு தான் போவார்.மாலை சரியாக ஆறு மணிக்கு எல்லாம் கையில் 'பூ'வுடன் வந்து இருப்பார்.இப்படி சந்தோஷமாக போயிக்கொண்டிருந்த வேளையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த சோகம் நடந்து விட்டது.

ஒரு நாள் வழக்கம்பொல் தன் மனைவிக்கு முத்தம் குடுத்து விட்டு,வேலைக்கு புதியதாக வாங்கிய பைக்கிள் கிளம்பினார்.அவர் போன அடுத்த இருபது நிமிடத்தில் அவர் வீட்டு ஃபோன் அடித்தது அவர் மனைவி நளினி தான் ஃபோனை எடுக்கிறாள்.எதிர்முனையில் கூறிய விஷயத்தை கேட்டு "அய்யோ" என்று கத்தியபடி வேளியே ஒடினாள், மற்றவர்களும் ஒன்னும் புரியாமல் அவளுடன் ஒடினார்கள்.அவர்கள் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் மெயின் ரோடு அங்கே ஒடிப்பொயி அவர்கள் கண்ட காட்சி ....

பிரகாஷ் பைக்கிள் ரோட்டை க்ராஸ் பண்ணுவதருக்கு வண்டியின் வேகத்தை அதிக படுத்திய அதே நேரம் ஒரு நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மொதி நிலைத்தடுமாறி கீழே விழ அப்பொழுது அங்கு வேகமாக வந்த லாரி ஒன்று பிரகாஷ் மீது மோதி அவர் மேல் ஏறிவிட்டது.இதைத்தான் நளினியும் மற்றவர்களும் கண்ட காட்சி.. அதற்குள் போலீஷ் வந்து இவர்களுக்கு தகவல் கொடுத்து இருக்கிறது.பிரகாஷின் உடலை 'பொஸ்ட் மார்டம்'பண்ணுவதருக்கு போலீஸ் அம்புலன்சு முலமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுவிட்டனர்.எல்லாம் முடிந்து விட்ட நிலையில்...!

ஒரு வாரம் கழித்து போலீஸ் நளினியை தேடி வந்து பிரகாஷ் விபத்தின்பொது அணிந்து இருந்த ரத்தகறை படிந்த அந்த துணியை கொடுத்தனர்.அதுவரை பிரமைபிடித்தவள்போல் இருந்த நளினி அந்த துணியை பார்த்ததும் 'ஓ'வென்று கதறினாள்.அன்றிலிருந்து அந்த துணியை பார்த்துகொண்டு பிரமைபிடித்தவள்ப்போல் வேறித்து பார்த்துகொண்டே இருந்தாள்.இரண்டு மாதங்கள் ஒடிவிட்டன எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பின.ஆனால் நளினி மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்!வீட்டிலிருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அந்த துணியை தூக்கி போடு அது இருக்கும்வரை உனக்கு அந்த‌ ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் என்று கூறியும்,நளினி அதை தூக்கி போடவில்லை.

ஒரு நாள் துணித்துவைப்பதற்காக எல்லா துணியையும் எடுத்து கொண்டு நளினி அங்கிருந்த குளக்கரைக்கு தனியாக வந்தாள் யாரும் இல்லை அங்கே.மதியம் 12.00 மணி இருக்கும்.எல்லத்துணிகளையும் துவைப்பதற்கு எடுத்தபொழுது அந்த ரத்தகரை படிந்த துணியும் இருந்தது அதை எடுத்து தண்ணியில் அமுக்கினாள்,திடிரேன்று பயங்கர இடி சத்தம்,திடுக்கிட்டுப்போனாள் நளினி மேலை பார்த்தாள் வானம் இருட்டிக்கொண்டு வந்தது.சுற்றும்முற்றும் பார்த்தாள் ஆள் நடமாட்டமே இல்லை,சரி மழை வருவதற்குள் துவைத்து கிளம்பிட நினைத்து அந்த துணியை மீண்டும் குளத்தில் அமுக்கினாள் மறுபடியும் பயங்கர இடி சத்தம்! இந்த முறை நளினி பயந்து விட்டாள்,ஏதோ நடக்கப்போகிறது என்பதை அவள் உள் மனம் சொல்லிற்று. ‌

இருந்தும் அந்த துணியை துவைக்கமால் போவதில்லை என்று துவைக்க அரம்பித்தாள்.என்ன?ஆச்சாரியம் அந்த துணியிலிருந்த ரத்தகரை சற்றும் போகவில்லை !மீண்டும் மீண்டும் அந்த துணியை அடித்து துவைக்க முயன்றாள் துளிகறையும் போகவில்லை.நளினி புரியாமல் முழித்தாள் அந்த நேரம் மேகம் மேலும் இருட்டிக்கொண்டு இருந்தது, அப்போழுது மேலிருந்து ஒரு 'ஒளிக்கீற்று' குளத்தின் நடுவே இறங்கி புகை போன்று ஒரு உருவம் தெரிந்தது,அதை பார்த்த நளினியாள் கத்தவும் முடியவில்லை ஒடவும் முடியவில்லை அதே நேரம் அந்த உருவம் அவளை நோக்கி வேகமாக வந்தது, அது அருகில் வர வர பார்த்த உருவம் போல் தொன்ற அமைதியாக நின்றுவிட்டாள்,அந்த உருவம் அருகில் வந்ததும் அது யார்? என்று பார்ப்பதர்க்குள் அந்த உருவம் ஒரு பேப்பரில் சுருட்டி எதோ ஒன்றை நளினியிடம் குடுத்து மறைந்து விட்டது.

உருவம் மறைந்து போனதால் கையிலிருந்த பொருளை உற்று நோக்கினாள் நளினி அப்பொழுது மேலிருந்து ஒரு 'அசீரிரி குரல்' கேட்டது "எந்த கரையாக இருந்தாலும் அதனை அகற்றி பளீச்சிடும் வேண்மைக்கு உபயோகிப்பீர் RIN RIN RIN(echo voice).
நளினி கையை பார்த்தாள் அவ‌ள் கையில் இருந்த‌து புத்த‌ம் புதிய‌ "RIN SOAP". 


via -அருண்  (நன்றி:- மின்சார்)

திங்கள், 17 ஜூன், 2013

Posted by Chief Editor On 5:29 AM

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!
Posted by Chief Editor On 5:15 AM

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

ஞாயிறு, 16 ஜூன், 2013

Posted by Chief Editor On 7:13 AM

இன்று(16-06-2013) அகிலவுலக தந்தையர் தினமாகும்.

மேலைநாடுகளில் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்ற இந்நாள்பற்றி நமக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது ஊடகங்களின் வாயிலாக கொஞ்சமாய் தெரிந்துவைத்திருப்போம்.

நண்பர்களுக்காக..
அன்னையர்களுக்காக..
காதலர்களுக்காக.. என்று
எல்லாவற்றிற்கும் ஒரு நாள் இருக்கையில்,
நம்மை விதைத்த தந்தையர்களுக்காகவென்று
ஒருநாள் இருக்கக்கூடாதா..?

வாருங்கள்..
தந்தையர்நாளை கொண்டாடும்முன் அந்நாள்பற்றிய வரலாறை தெரிந்துகொள்ளலாம்.

இணையத்தில் கிடைத்தனவற்றை சிறிய அளவில் தொகுத்துள்ளேன்.

படித்துவிட்டு இந்நாளை கொண்டாடுங்கள்.

William Jackson Smartஎன்றொரு மனிதர்.

1842ஆம் ஆண்டு ஜூன்மாதம் ஐந்தாம்நாளில் பிறந்த இவர்,
அமெரிக்க காவற்படையில் பணிபுரிந்தார்.

இவரின் மனைவி Ellen Victoria Cheek Smart.

இவர்களுக்கு ஆறு குழந்தைகள்.

முதற்குழந்தைமட்டும் பெண்குழந்தை.
அவரின் பெயர் Sonora Smart Dodd.

ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கும்போது
இறந்துபோகிறார் Ellen Victoria.

அப்போது Sonoraவிற்கு பதினாறு வயது.

அமெரிக்காவிலோ உள்நாட்டுப்போர்.
காவற்படையிலிருந்த Williamsக்கோ பெருஞ்சுமையான பணிச்சூழல்.

இந்நிலையில் மனைவியின் இறப்புவேறு.

ஆனால் இதற்கெல்லாம் துவண்டுபோகவில்லை Williams.

மறுமணஞ்செய்துகொள்ளாமலேயே
தனியாகவே தன் ஆறுகுழந்தைகளையும்
கூடவே உள்நாட்டுப்போரின் விளைவால் பெற்றோரை இழந்த வாய்பேசவியலாத குழந்தையான Marshellஐயும்
அரும்பாடுபட்டு வளர்க்கிறார் அவர்.

இதையெல்லாம் கூடவே நின்று பார்த்து மனம் நெகழ்கிறார் அவரின் மகளான Sonora.

அப்பாவிற்காக ஏதாவது செய்யவேண்டுமென்று அவரின் பாசவுள்ளம் துடிக்கிறது.

அப்போது அமெரிக்காவில் "அன்னையார்நாள்"
பெரிதாகக்கொண்டாடப்பட்டிருந்த காலம்.

அதேபோன்று அப்பாக்களுக்காகவும் ஒருநாளை கொண்டாடினாலென்னவென்று
Sonoraவின் மனதுள் கேள்வியெழுகிறது.

இதற்காக அங்கேயிருந்த உள்ளாட்சியமைப்புகளின் வாயிலாக தேவாலயத்தில் அருட்தந்தையாக இருந்தவரிடம்
தன் தந்தையின் பிறந்தநாளான ஜூன் ஐந்தாம்நாளை தந்தையர்களுக்கான நாளாக அறிவிக்கவேண்டுமென
வேண்டுகோள்விடுக்கிறார்.

அங்கேயிருந்தவர்கள் அனைவருக்குமே Williamsன் நன்மனது புரிந்தமையால் எல்லோரும் ஒப்புதலளிக்கின்றனர்.

இருந்தபோதிலும் உடனடியாக அறிவிக்கமுடியாதெனவும் மேற்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர்
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அதுபற்றி அறிவிக்கிறேனென்கிறார்.

அதன்படி 1910-ஜூன்-19ஆம் நாளை தந்தையர் நாளாக அறிவிக்கிறார் அருட்தந்தை.

இது,
அந்த பகுதியில் மட்டுமே கொண்டாடப்பட்டது.

ஆனால் என்ன காரணத்தாலோ
தந்தையர்நாளின் கொண்டாட்டங்கள் இல்லாமற்போகின்றன.

இதற்கிடையே, Williams 1919ஆம் ஆண்டில் இறந்துபோகிறார்.

இறக்கும்வரையிலும் தம் குழந்தைகளுக்காகவே
வாழ்ந்து அவரின் குழந்தையையும் போரினால் அனாதையாக்கப்பட்ட குழந்தையையும் நன்றாய் வளர்த்த அவரின் மறைவு,
Sonoraஐ துன்பத்திலாழ்த்துகிறது.

இதற்கிடையே தந்தையர்நாள் கொண்டாடப்படுவதும் நின்றுபோனதால் என்னசெய்வதென்றே தெரியவில்லை Sonoraவிற்கு.

இருந்தபோதிலும் மனந்தளராமல் அரசாங்கத்திடம் போராடி,
தந்தையர்நாளை அரசாங்கமே அறிவிக்கச்செய்கிறார்.

எப்போது தெரியுமா?
1972ஆம் ஆண்டில்தான் அறிவிக்கிறார்கள்..

அமெரிக்க அரசாங்த்தின் அதிபர் Nixonதான் இதை அறிவிக்கிறார்.

அதன்பிறகு ஒவ்வோராண்டும்,
ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர்நாளாக கொண்டாடுகின்றனர் மேலைநாட்டினர்.

நம் பண்பாட்டிற்கொவ்வாத மேலைநாட்டின் பல பண்பாடுகளை
நம் பண்பாட்டிலும் உட்புகுத்திக்கொண்ட நாம்,
இதுபோன்ற நல்லனவற்றையும் எடுத்துக்கொண்டால் நன்றாயிருக்குமே..!

அமெரிக்காவில் எங்கோ பிறந்த Williamsக்காக
நாம் இந்த நாளை கொண்டாடவேண்டாம்.

அந்நாளின் பெருமையை அடியொற்றி,
நமக்காகவே வாழ்ந்து
நமக்காக வெயிலென்றும் மழையென்றும் பாராமல்
உழைத்துவுழைத்து ஓடாகிப்போன
நம் அப்பாவின் மனதிற்காகவும்;
நாம் பிறப்பதற்காக
நம்மை தன் வயிற்றில்
பத்துமாதம் சுமந்தவர் நம் தாயென்றாலும்,
நாம் வளர்வதற்காக
ஆண்டுதோறும்
தன் முதுகில் மூட்டைச்சுமப்பவர்
நம் தந்தையென்பதால்,
அவரின் பாசத்திற்கு நன்றிநவிலும்பொருட்டும்
இந்நாளை நாம் கொண்டாடலாமே..?

சரி.

இந்நாளை எப்படிக்கொண்டாடலாம்?

அப்பாவிற்கு வாழ்த்துசொல்லலாமா?
சொல்லலாம் சொல்லாமலுமிருக்கலாம்.

அதைவிட,
அப்பாவின்  ஆசிபெறலாம்.

அப்பாவிற்கு பிடித்தவுணவுகளை வீட்டில் சமைக்கச்சொல்லலாம்.

அப்பாவை இழந்தவர்கள் அப்பாவின் நினைவுகளில் கொஞ்சம் மூழ்கிப்போகலாம்.

எல்லாமே நம் மனதில்தானுள்ளது.

இந்நாளில்,
என் நண்பர்களின் தந்தையர்களுக்கும்
தந்தையர்களாக உள்ள என் நண்பர்களுக்கும்
என் மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தாய்ப்பாக,
என் பழைய குறுங்கவிதையொன்றுடன் முடிக்கிறேன்.

ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும்
இன்னும்
ஆவணப்படுத்தப்படாமலேயே உள்ளது...!
தாயன்பிற்கு நிகரான
தந்தையர்தம் பெருமை.

- ஃபீனிக்ஸ் பாலா

சனி, 15 ஜூன், 2013

Posted by Chief Editor On 5:35 AM

அன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர் புராஜெக்ட் ஆரம்பமாகிறது. எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். 10 மணிக்கு கஸ்டமர் தரப்பிலிருந்து ஏழு பேர் வந்தார்கள். கூட்டம் ஆரம்பமானது. வந்தவர்களில் சீனியராகத் தோன்றிய ஒருவர் படபடவென்று பேசத் தொடங்கினார். ‘இப்போ எங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு ஏற்கனவே விளக்கமா சொல்லிட்டோம். அதையெல்லாம் உங்க சாஃப்ட்வேரால் தீர்க்க முடியுமா?’

அந்த சாஃப்ட்வேர் கம்பெனியின் முக்கிய பிரமுகர் புன்னகையோடு பதில் சென்னார். ‘முடியலாம்’.

‘என்னது? முடியலாமா? உங்களால் முடியும்னு நம்பித்தானே லட்சக்கணக்கில் காசைக் கொட்டியிருக்கோம். இப்போ இப்படி சொன்னா என்ன சார் அர்த்தம்?’

‘பதற்றப்படாதீங்க சார். கொஞ்சம் நிதானமா பேசுவோம்’ என்றவர், ‘ஒரு ஜென் கதை சொல்றேன், கேட்கறீங்களா?’ என்றார்.

‘ஜென் கதையா?’ இது சாஃப்ட்வேர் கம்பெனியா இல்லை சாமியார் மடமா? என்று கிண்டலடித்ததைப் பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினார் சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரமுகர். ‘இப்போ உங்ககிட்ட நான் ஒரு கயிறைக் கொடுக்கறேன். அதில ஒரு முடிச்சு விழுந்திருக்கு. நீங்க அந்தக் கயிறை அறுக்காம அந்த முடிச்சை அவிழ்க்கணும். உங்களால முடியுமா?’

‘நிச்சயமா முடியும்?’ என்றவரிடம் ‘எப்படி அவிழ்ப்பீங்க?’ என்றதற்கு, ‘முடிச்சு எப்படி விழுந்திருக்குன்னு பார்ப்பேன். அதற்கு நேர் எதிர் திசையில கயிற்றை நகர்த்தினா முடிச்சு தானா அவிழ்ந்துடப் போகுது!’ என்றார். ‘ஆக, முடிச்சு இருக்குன்னு தெரிஞ்சா மட்டுமே அதை அவிழ்த்துட முடியாது. அந்த முடிச்சு எதனால விழுந்ததுன்னு கவனிச்சுப் புரிஞ்சுக்கணும். அப்புறம் தான் அதை அவிழ்க்க முடியும். கரெக்டா?’ என்ற சாஃப்ட்வேர் பிரமுகர், ‘சாஃப்ட்வேர் தத்துவமும் இதே தான்!’ என்ற படி ‘உங்க பிரச்சனைகளை மட்டும் சொன்னாப் போதாது நீங்க என்ன செஞ்சதால அந்த பிரச்சனைகள் வந்ததுன்னு நாங்க கேட்டு, பார்த்து, கவனிச்சுப் புரிஞ்சுக்கணும். அப்புறம் எங்க சாஃப்ட்வேர் மூலமா அதற்கு எதிர் திசையில் போய் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி பண்ணனும், எதையும் அவசரப்பட்டுச் செய்யமுடியாது’ என்றார். வந்தவர்களும் நம்பிக்கையுடன் சொன்றார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரமுகர் தன்னுடைய பணியாளர்களிடம் அந்த புராஜெக்ட் பற்றி கேட்டதற்கு, ‘அது பெரிய பிரச்சனையுள்ளது. அவ்வளவு பிரச்சனைகளையும் தீர்ப்பதென்பது மிகவும் கடினம். எங்களால் சரி செய்ய முடியாது’ என்று பதிலளித்தனர். தன்னுடைய பணியாளர்கள் புராஜெக்டில் உள்ள பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவராக, பணியாளர்களுக்கு ஒரு யானைக் கதையைக் கூறினார்.

‘அரசர் ஒருவருக்கு திடீரென்று ஒருநாள் தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்த காலத்தில் எடை மேடைகளோ, யானைகளை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசோ கிடையாது என்பதால் எப்படி அளப்பது என்று அமைச்சரிடம் கேட்க அவருக்கும், யாருக்கும் அதற்கான வழியே தெரியவில்லை. அந்த சமயத்தில் அமைச்சரின் 10 வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். எல்லோரும் கிண்டலாகச் சிரித்தனர். ஆனாலும் மன்னர் ஒரு வாய்ப்புக் கொடுத்தார்.

சிறுவன் யானையை நதிக்கு அழைத்துச் சென்று பெரிய படகில் ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே தண்ணீர் நனைந்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.

பிறகு, யானையைப் படகில் இருந்து இறக்கிவிட்டு பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன. கற்களை மன்னனிடம் காட்டி, ‘அவற்றின் எடைதான் யானையின் எடை’ என்ற சிறுவனைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத் தான் பார்த்தார்கள். ஆகவே அவர்களால் தான் எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

அதுபோல தான் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அதனைச் சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒட்டுமொத்த திட்டமும் அழகாக நிறைவேறிவிடும் என்று முடித்தவர், தன்னுடைய பணியாளர்களுக்கு அந்த புராஜெக்டின் பிரச்சனைகளை சிறுசிறு பகுதியாகப் பிரித்துக் கொடுத்து அவற்றிற்குத் தீர்வு காணச் செய்தார். எளிமையான தீர்வு கிடைத்தது. அவற்றை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து புராஜெக்டை வெற்றியாக்கிக் கொண்டார்.
Posted by Chief Editor On 5:25 AM

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்ப
ூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
Posted by Chief Editor On 5:22 AM

தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர், ''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான். 

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான். 

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன. 
  • முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது. 
  • அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது. 
  • இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. 

பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.

பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக் கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.
  1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.
  2. விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.
  3. தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.
  4. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.
  5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

வியாழன், 13 ஜூன், 2013

Posted by Chief Editor On 11:22 PM

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் சித்தி எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.

இறுதி பரீட்சையில் சித்தியடைந்து, மருத்துவ கல்லூரிக்கு மகன் தெரிவானது அவளிற்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.

அவனை பார்க்க அவள் பல முயற்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், " தாயே! நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைத்தியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயாக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.

அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ தான் சமைத்தாயா?" என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். " அப்படியானால் யார் சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.

அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, "இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்". கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.

துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.

தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.

காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி அம்மா என கத்தி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.

ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். "உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் நிலையில் இருக்கிறாள்" என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. உயிர் போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "அம்மா" என கதறினான். கண்ணீர் விட்டான். தாயின் இறந்த உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.

இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்டிக்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....

"அன்பின் மகனே!.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.

மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.

உனது உள்ளத்து உணர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!

மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று! அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.

அதனால்....

என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...

உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லவா? இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்."

இப்படிக்கு, என்றுமே அன்புள்ள,
உன் குருட்டுத் தாய்.


நன்றி:- முஹம்மத் பfஹ்மி