
கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் ."தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக...